தமிழ் சினிமாவில் தனக்கேயுரித்தான பாணியில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில அவர்களும் இவர்களும் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார்.
இவர் நடித்த காக்கா முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளன.
ஐஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.மேலும் பர்ஹானா, சொப்பன சுந்தரி, துருவ நட்சத்திரம், மோகன்தாஸ், ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தனது 33வது பிறந்தநாளை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினர் & நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.இந்த கொண்டாட்டத்தில் 9 கேக்குகள் வெட்டப்பட்டன. கேக் வெட்டிய பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் செம்ம டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரலாக பரவி வருகிறது.
Listen News!