• Nov 17 2024

இந்த நடிகரின் மகளா ஐஸ்வர்யா ராஜேஷ்… அவரது தாத்தா யார் தெரியுமா..? வெளியான தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக காலடி எடுத்து வைத்து சுமார் 12 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவர் ஆரம்பத்தில் 'பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை' போன்ற படங்களில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 'செக்க சிவந்த வானம், கனா, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தன்னுடைய நடிப்புத் திறமையினால் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருக்கின்றார். அதுமட்டுமன்றி இன்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமின்றி ஹீரோயின்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா பற்றி ஒரு சுவாரஸியமான தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமாகியிருப்பதால் பலரும் அவரை தமிழ் பெண் என்றே நினைத்திருந்தார்கள். ஆனால் உண்மையில் ஐஸ்வர்யா தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர். அவர் பிறந்தது, வளர்ந்தது சென்னை என்றாலும் அவரது அப்பா, தாத்தா போன்றவர்கள் தெலுங்கை சேர்ந்தவர்கள். அதுமட்டுமன்றி இவர்கள் தெலுங்கு சினிமாவில் நடிகர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

இவ்வாறாக ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம் சினிமா பின்னணி கொண்டமைந்திருக்கின்றது. அத்தோடு அவரது தாத்தா அமர்நாத் தெலுங்கில் சில படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். அவர் ஹிந்தியிலும் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறாராம்.

மேலும் அமர்நாத்தின் மகனும் ஐஸ்வர்யாவின் தந்தையுமான ராஜேஷும் நடிகராகி தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமன்றி மலையாளத்திலும் வில்லனாக நடித்துப் பல படங்களில் கலக்கி இருக்கின்றார்.

இந்தவகையில் நடிகர் ராஜேஷ் - நாகமணி ஜோடிக்கு பிறந்த மகள் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இவர் பிறந்து 8 வயது இருக்கும்போது அப்பா ராஜேஷ் எதிர்பாராத வகையில் மரணமடைந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறிது காலத்தின் பிறகு ஐஸ்வர்யாவின் அண்ணன்களும் விபத்தில் இறந்துவிட்டனர். இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் பல பேட்டிகளில் கூறியிருக்கின்றார்.

இவ்வாறாக தெலுங்கு சினிமாவைப் பின்னணியாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் இன்று தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டு இருக்கின்றார் நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement