• Sep 20 2024

நெதர்லாந்து நாட்டின் காற்றாலை நகரத்தில் கவர்ச்சி உடையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்- தீயாய்ப் பரவி வரும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நயன்தாரா, த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் தான் கனா.இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்ததோடு அருண் காமராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றது

இதே போல இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் படமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் வெப் சீரியல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்று அங்கிருந்து ஈபிள் கோபுரம் அருகில் அமர்ந்தும் நின்றும் நடந்தும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரான்ஸ் சுற்றுலாவை முடித்து கொண்டு தற்போது நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் காற்றாலை நகரமான Zaanse Schans நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement