தமிழ் சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திற்குள் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்தடுத்துப் பல படங்களில் நடித்து வருகின்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது 'தீரா காதல்' என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
அந்தவகையில் ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘தீரா காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனையிட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயமானது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது ட்விட்டர் கணக்கை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!