இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க எந்த ஹீரோவும் முன்வரவில்லை
என்பதை எடுத்து அவர் தனது ஹீரோ
கேரக்டரை ஹீரோயின் கேரக்டராக மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ திரைப்படம்
எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற நிலையில் அவர்
தனது அடுத்த படத்தின் பணிகளை தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சித்தார்த்தை சந்தித்து கதை கூறிய நிலையில்
அவர் எந்த முடிவும் சொல்லாமல்
யோசித்து சொல்வதாக கூறிவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின் அவர் வேறு சில
ஹீரோக்களை தொடர் கொண்டபோது அவர்கள் கதை கேட்கவே மறுத்து
விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன்னுடைய கதையை கேட்க எந்த ஹீரோவும் முன்
வரவில்லை என்பதால் நொந்து போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தன்னுடைய ஹீரோ கேரக்டரை அப்படியே
ஹீரோயின் கேரக்டராக மாற்றிவிட்டதாகவும் இதனை அடுத்து முன்னணி
ஹீரோயின்களிடம் இந்த கதையை சொல்ல
அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக அவர் நயன்தாரா, த்ரிஷா
உள்ளிட்ட நடிகைகளை சந்தித்து கதை கூற இருப்பதாகவும்
அவருடைய அடுத்த படம் ஒரு ஹீரோயின்
சப்ஜெக்ட் தான் என்பது கிட்டத்தட்ட
உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க நயன்தாரா அல்லது த்ரிஷா ஒப்புக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!