• Nov 14 2024

2-ஆவது திருமண சர்ச்சைக்கு மத்தியில்... வெளியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வாறு இருக்கையில்  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் இருந்து பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில்  தெரிவித்தனர்.


இந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அத்தோடு குடும்பத்தினர்கள் பல முயற்சியை செய்தும் இருவரும் ஒன்றிணையவில்லை. இன்றுவரை இருவரும் பிரிந்து தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல இளம் நடிகரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.


இவ்வாறான திருமண சர்ச்சைகளுக்கு மத்தியில் அவை எவற்றையும் செவிமடுக்காது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement