• Nov 17 2024

படம் ரிலீஸ் ஆன பின்னர் தான் நான் செஞ்ச தப்பு எனக்கு புரிஞ்சது: ‘லால் சலாம்’ குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மத நல்லிணக்கம் குறித்த நல்ல கருத்து மற்றும் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் தோல்வி அடைந்தது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தான் நான் செய்த தவறு என்ன என்பதை எனக்கு புரிந்து கொண்டது என்றும், இந்த படத்தில் இருந்து நான் சில பாடங்கள் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

’லால் சலாம்’ படத்தின் முதல் பாதியில் நான்லீனியர் என்ற வகையில் சில டிவிட்டுகளை வைத்திருந்தேன் என்றும் அதை எல்லாம் பார்வையாளர்கள் இரண்டாம் பாதியை பார்க்கும்போது புரிந்து கொள்வார்கள் என்றும் நான் கணித்திருந்தேன். ஆனால் முதல் பாதியை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் கதை சுத்தமாக புரியவில்லை என்றும் இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்தனர்.



அதன் பிறகு தான் எனக்கு புரிந்தது, பார்வையாளர்களுக்கும் புரிய வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்றும் பார்வையாளருக்கு புரியும் வகையில் இன்னும் கதையை எளிமையாக சொல்லி இருக்கலாம் என்றும் நான் எனது தவறை புரிந்து கொண்டேன். அது மட்டுமின்றி இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டர் 10 நிமிடம் மட்டுமே வரும் வகையில் தான் முதலில் உருவாக்கப்பட்டது என்றும் ஆனால் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் இணைந்தவுடன் தான் அந்த கேரக்டரை சுற்றி கதையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் அதுவும் நான் செய்த தவறுகளில் ஒன்று என அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முதலில் மொய்தின்பாய் கேரக்டரில் வேறு ஒரு நடிகரை தான் நடிக்க திட்டமிட்டு அந்த கேரக்டரை உருவாக்கியதாகவும் ஆனால் சூப்பர் ஸ்டார் இந்த படத்திற்கு வந்த பிறகு திரைக்கதையை மாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் அடுத்த படத்தில் இனி ட்விஸ்ட் வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் பாமர ரசிகனுக்கும் புரியும் வகையில் எடுப்பேன் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement