• Sep 21 2024

சைக்கிளிங் மீது காதல் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…வெளியான புகைப்படம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் ரஜினிகாந்தின் மூத்த மகளே ஐஸ்வர்யா. அதுமட்டுமல்லாது நடிகர் தனுஷின் மனைவியும் கூட. இவரிற்கும் இவரது காதல் கணவரான நடிகர் தனுஷிற்கும் இடையில் இடம்பெற்ற ஒரு சில மனக் கசப்பான சம்பவங்களின் காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து இவர் சமூக வலைத்தளங்களில் என்றுமே இல்லாத அளவிற்கு ஆக்டிவாகவும் இருந்து வருகின்றார். தனது போட்டோ, வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் இவர் சமீபகாலமாக தான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்பபடங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றார். அதுமட்டுமன்றி யோகாவின் முக்கியத்துவம் பற்றியும் ரசிகர்களுக்கு வலியுறுத்தி வருகின்றார்.

அதுமட்டுமல்லாது சைக்கிளிங் மீது தனக்கு தீவிர காதல் இருப்பதாகவும் கூறியிருக்கின்றார். அதிகாலையில் எழுந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவதாக ஏற்கெனவே ஒரு வீடியோவில் தெரிவித்து இருக்கின்றார்.

இந்தநிலையில் இவர் தற்போதும் தனது காதலான சைக்கிளிங் பற்றி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றினை இட்டிருக்கின்றார். அதில் இவர் ரெட் கலர் உடையில் சைக்கிளிங் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். இப்பதிவு ரசிகர்கள் மத்தியில் தற்போது செம வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement