• Nov 19 2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு 2-ஆவது திருமணம்..? உண்மையை வெளியிட்ட நெருங்கிய வட்டாரங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வாறு இருக்கையில்  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் இருந்து பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில்  தெரிவித்தனர்.


இந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அத்தோடு குடும்பத்தினர்கள் பல முயற்சியை செய்தும் இருவரும் ஒன்றியவில்லை. இன்றுவரை இருவரும் பிரிந்து தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மற்றுமோர் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல இளம் நடிகரை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.


இதனையடுத்து இந்த தகவல் அனைத்தும் வெறும் வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்தவகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் பிரபல ஆங்கில டிஜிட்டல் ஊடகம் ஒன்றிடம் பேசிய போது இது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

அதாவது " ஐஸ்வர்யா 2-வது திருமணம் குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. அவற்றில் எந்த உண்மையும் இல்லை. அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement