தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் '3, வை ராஜா வை' போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவான இப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்த பாராட்டுக்களை பெற்றிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதோடு, இப்படத்திற்கு 'லால் சலாம்' என பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து விக்ராந்தும் இந்த படத்தில் நடிக்கிறார். அத்தோடு இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். கிரிக்கெட் தொடர்பான கதையம்சத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். லால் சலாம் படத்திற்கான பாடல் கம்போஸிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லண்டன் சென்றிருக்கின்றார். அங்கு நடிகை சுஹாசினியுடன் இணைந்து புகைப்படமும் எடுத்திருக்கின்றார். சுஹாசினியை கட்டியணைத்து மிகவும் நெருக்கமாக அவருடன் புகைப்படம் எடுத்திருக்கின்றார்.
இது குறித்த புகைப்படங்களை சுஹாஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றார். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது படு வைரலாகி வருகின்றன.
Listen News!