தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். இவர் சினிமா மட்டுமல்லாமல் பைக், கார், சைக்கிள், ஹெலிகாப்டர், விமானம் என ஆட்டோமொபைல் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் ஆர்வம் மிகுந்தவர்.
தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு முடிந்தவுடன் உலக பைக் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்கான ஆயுத பணிகளை அவர் மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் தற்போது AK Moto Ride என்ற ஒரு புது பைக் சுற்றுலா நிறுவனத்தை அவர் துவங்கியுள்ளார். இது
இந்தியா மட்டுமல்லாமல் உலகில் இருக்கும் பிரமிக்கவைக்கும் இடங்களை பார்க்க பைக் சுற்றுலா செல்பவர்களுக்காகவே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது.
அந்தவகையில் வலைப்பேச்சு அந்தணன் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில் '' பைக் ரைடர்ஸ் கஸ்டப்பட கூடா என இந்த திட்டத்தினை முன்னெடுத்திருக்கிறார் அஜித் .இந்த பைக் ரைட் போக விரும்பவர்கள்,அதாவது இந்தியா முழுவதும் சுற்றி பார்க்க விரும்புவர்கள் ஒரு பைக் ரைட்டுக்கு 8 லட்சம் வரை செலுத்தினால் பைக் தரப்பட்டு சென்று வருவதற்கான வேலைப்பாடுகள் செய்து தரப்படும் என்ற தகவல் உலா வருகிறது. அது உண்மை தான் .இந்த மாதிரியான இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் உள்ளன.அந்த நிறுவனங்களை அஜித் அப்ரோச் பண்ணி உதவி பண்ணுற மாதிரியான விடயங்கள் எதிர்காலத்தில் நடைபெறும்''என கூறியிருக்கிறார்.
இவர் இவ்வாறு கூறிய விடயம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Listen News!