• Sep 20 2024

அசர்பைஜான் சூட்டிங்கின்போது அஜித் மற்றும் த்ரிஷா எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோ

stella / 8 months ago

Advertisement

Listen News!

துணிவு படத்தைத் தொடர்ந்து இக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடித்து வருகின்றார்.மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பான கமெண்ட்களை பெற்றுள்ளன.

 இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் தற்போது விடாமுயற்சி படத்தில் இருவரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.


இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை தொடர்ந்து சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினர். தொடர்ந்து அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அசர்பைஜான் புறப்பட்டு சென்றனர்.

விமானநிலையத்தில் இருந்து இவர்கள் அசர்பைஜான் புறப்பட்டு சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அசர்பைஜானில் அஜித், அர்ஜூன் இணைந்த கார் சேஸிங் காட்சிகளின் சூட்டிங் படமாக்கப்பட்டன. இதன்போது நடிகை த்ரிஷா சென்னை திரும்பினார்.


இதனிடையே புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அஜித்தும் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிலிருந்து கேப் எடுத்துக் கொண்டு லண்டன் சென்றுள்ளார். அவரும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே அசர்பைஜான் சூட்டிங்கின்போது அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement