• Sep 21 2024

பான் இந்தியத் திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ள அஜித் மற்றும் விஜய்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இவர்கள் படம் வெளியாகும் போதெல்லாம் இவர்களுடைய ரசிகர்கள் மாறி மாறி அடித்துக் கொள்வதும் உண்டு.

அந்த வகையில் நடிகர் விஜய் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார். அதே போல நடிகர் அஜித் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படங்கள் குறித்த அறிவிப்பும் அடிக்கடி வெளியாவதுண்டு .

இவர்கள் இருவரும் இணைந்து பல வருடங்களுக்கு முதல் ராஜாவின் பார்வையிலே என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்பொழுது இருவரும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகளவாகக் காணப்படுகின்றது.

இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் விஜய் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் அது பான் இந்தியத் திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் இசையமைப்பாளர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement