• Sep 20 2024

இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் நிறைவு செய்த அஜித்- விமானத்தில் செல்லும் மாஸ் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பினாலும் அழகினாலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வலிமை என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை எச். வினோத் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது தனது 61வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தையும் எச். வினோத் தான் இயக்குவதோடு போனிகபூர் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் ஹைதரபாத்தில் சிறிய பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் தீபாவளிக்கு படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு கட்டங்களாக ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித் தற்போது தனது காட்சிகளை அங்கு நடித்து முடித்து சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அஜித் விமானத்தில் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement