கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தமன்னா. விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இதன் காரணமாக கோலிவுட்டில் தமன்னா அலை அடிக்க ஆரம்பித்தது.
தற்போது ஹிந்தியில் செட்டில் ஆகியிருந்த தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்துக்காக மீண்டும் அழைத்து வந்தார். படத்தில் சிறிய வேடத்தில் அவர் நடித்திருந்ததாக கூறப்பட்டாலும் முதல் சிங்கிளான காவாலாவில் தமன்னாவின் நடனம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து அவர் கோலிவுட்டில் மீண்டும் ஹாட் டாபிக்காக இருக்கிறார். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அப்போது நெறியாளர், வீரம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பீர்கள். ஆனால் அஜித் அந்தப் படத்தில் கொஞ்சம் டை அடித்திருக்கலாம் என எங்களுக்கு தோன்றியிருக்கிறது. உங்களுக்கும் அப்படி தோன்றியிருக்கிறதா? இதுகுறித்து இயக்குநரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தீர்களா? அஜித் அதில் டை அடித்திருந்தால் இன்னும் உங்கள் இருவருக்கும் மேட்ச் ஆகியிருக்குமோ என்றும் தோன்றியது என கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த தமன்னா, "அப்போது என்னால் கேட்கமுடியவில்லை. இப்போது என்றால் கேட்டிருப்பேன் ஆரம்பத்தில் அப்படியான சுதந்திரம் எதுவும் எனக்கு இல்லை. ஆனாலும் ஒவ்வொரு நடிகரும் கேள்வி கேட்க வேண்டும்.
மற்ற துறைகளில் அந்த சுதந்திரம் இருக்கிறது. வெளிப்படையாக பேச சில இயக்குநர்கள் ஸ்பேஸ் கொடுக்கிறார்கள். சிலர் கொடுப்பதில்லை" என கூறியிருந்தார்.
Listen News!