• Sep 20 2024

ரசிகர்களுக்கு வைப் கொடுத்த அஜித்- என்ன மாஸாக கார் ஓட்டுகிறார் என்று பாருங்க- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஆசை நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ள விடாமுயற்சி, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

அதேபோல், விடாமுயற்சி டைட்டில் டீசர் வெளியான பின்னர் இதுவரை வேறு எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை . ஒருபக்கம் விஜய்யின் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள், தளபதி 68 அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், விடாமுயற்சி படம் குறித்து இன்னும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பதால் அஜித் ரசிகர்களே விரக்தியில் உள்ளனர்.


வலிமை, துணிவு படங்களுக்கு அப்டேட் கேட்டு டிவிட்டரில் ட்ரெண்ட் செய்ததைப் போன்றே இப்போதும் அடிக்கடி விடாமுயற்சி ஹேஷ்டேட் வைரலாகிறது. இதனிடையே பைக் ட்ரிப் செல்லும் அஜித்தின் புகைப்படங்களும் அவ்வப்போது ட்ரெண்டாகின்றன.

 விடாமுயற்சி அப்டேட் கிடைக்காத ரசிகர்களுக்கு இதுமட்டுமே பெரிய ஆறுதலாக உள்ளது.இந்த நிலையில் அஜித் மாஸாக கார் ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement