'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு.இந்த திரைப்படம், ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பானது அதிகமாக உள்ளது.
பேங்க் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், கிட்ட தட்ட பிரபல ஹாலிவுட் வெப் தொடரான'மனி ஹெய்ஸ்ட்' தொடரை போன்று உள்ளதாகவும், அதே போல் சில காட்சிகள் 'பீஸ்ட்' படத்துடன் ஒத்துப்போவதாக இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியான போது விமர்சனங்கள் எழுந்தது.
படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித்தின் எந்த படங்களுக்கும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது இல்லை என்பதால் துணிவு படத்தின் போஸ்ட்டரை கார், வேன், மற்றும் ஸ்கை டைவிங் மூலம் வானில் பறந்து என பல்வேறு விதத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் 'துணிவு' படத்தில் நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து, பிரபல ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார். அப்போது தொகுப்பாளர் மஞ்சு வாரியரிடம் 'துணிவு' படத்தில் ஜெட் ஸ்கை காட்சிகள் இடம் இடப்பெற்றிருந்தது. அஜித் மற்றும் நீங்கள் ஜெட் ஸ்கை செய்வது போல் எடுக்கப்பட்டது.டூப் போட்டு எடுக்கப்பட்டதாக பல்வேறு விமர்சனங்கள் வந்தது, எனவே அந்தக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்பதை நீங்களே கூறுங்கள் என தெரிவித்தார்.
இதற்கு மஞ்சு வாரியர் அஜித் எவ்வித டூப்பும் பயன்படுத்தாமல் தான் இந்த காட்சிகள் நடித்தார். ஆனால் நான் முதல் முறையாக இது போன்ற காட்சியில் நடித்தேன். அவர் தான் எனக்கு ஜெட் ஸ்கை செய்த சொல்லிக்கொடுத்தார்.இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!