• Sep 20 2024

சூப்பர் மார்க்கெட்டில் பெண்ணிற்கு வழிவிட்ட அஜித் -இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

‘அமராவதி’ என்ற படத்தில் அஜித் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ‘ஆசை’ என்ற திரைப்படம் தான்.

நடிப்பையும் மிஞ்சி இவரது அழகுக்கு மயங்காத பெண் ரசிகர்களே இல்லை என்று தான் கூற முடியும். அமராவதியில் ஆரம்பித்து வலிமை வரைக்கும் பல படங்களில் நடித்துள்ள இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கின்றார். இவர் நடித்த பல படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி புகழையும் பரப்பி இருக்கின்றன.

இவர் நடிப்பில் மட்டுமல்லாது சமூக சேவைகளிலும் ஆர்வம் மிக்கவர். இதற்கு உதாரணமாக 2014-ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து உதவி செய்து இருப்பதைக் குறிப்பிட்டு கூறலாம்.

இவ்வாறாக சமூக சேவைகளில் மட்டுமல்லாது படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த ‘வலிமை’ படமானது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் அப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் AK61 திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் அப்படத்தில் இருந்து ப்ரேக் எடுத்துள்ள அஜித் தற்போது ஜரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். இதனிடையே தற்போது அஜித் லண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் அங்குள்ள விற்பனையாளரிடம் கை குலுக்கிவிட்டு எதோ பேசிவிட்ட அங்குள்ள பெண்ணுக்கு வழிவிட்டு செல்கிறார் அஜித். இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement