தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருப்பவர் தான் அஜித். இவரது நடிப்பில் இறுதியாக எச் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்ில் நடித்து வருகின்றார்.
ஏ. கே 61 என்று அழைக்கப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகியதோடு இப்படத்திற்கு துணிவு என்று பெயர வைக்கபட்டுள்ளதாக நேற்றைய தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதனை தொடர்ந்து இன்று துணிவு படத்தின் இரண்டாவது போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டது. அதுவும் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் லுக்கிற்காக அஜித் தயாரான போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனையும் ரசிகர்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!