• Sep 20 2024

பிரபல இயக்குநருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் அஜித்? AK63 பற்றி வெளியான தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் துணிவு படம் தற்போது தியேட்டர்களில் நல்ல வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில் அஜித் தனது அடுத்த படமான AK62 படத்தில் தான் இனி கவனம் செலுத்த போகிறார்.



விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இவ்வாறுஇருக்கையில்  தற்போது அஜித் தற்போது தனது அடுத்த படத்திற்காக தற்போதே கதை கேட்க தொடங்கிவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.



எனினும் தற்போது அஜித் ஒரு முக்கிய இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அத்தோடு பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் உடன் தான் அஜித் மீண்டும் கூட்டணி சேர பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் தான் இந்த அடுத்த படத்தை தயாரிக்க போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.  


Advertisement

Advertisement