• Sep 20 2024

அஜித் சொன்னதை இப்போது செய்து விட்டார்- விக்னேஷ் சிவன் பகிர்ந்த தகவல்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகர்களில் முக்கியமானவராகக் காணப்படுவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வலிமை என்னும் திரைப்படம் வெளியாகியது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து அஜித் தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினையும் இயக்குநர் எச் வினோத் தான் இயக்குகின்றார். போனிகபூர் தயாரிக்கின்றார். மேலும் அஜித் வழமையாக ஒரு படம் வெளியாகி நீண்ட நாட்களுக்குப் பிறகே தன்னுடைய அடுத்த படத்தைப் பற்றி அறிவிப்பார்.

ஆனால் இப்போது அவரின் 61வது படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ரீட்டாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் விக்னேஷ் அஜித் 62 படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அஜித் படம் இயக்குவது, அவருடனான சந்திப்பு குறித்து பேசியுள்ளார். அதில் “என்னுடைய நானும் ரௌடிதான் திரைப்படம் அஜித் சாருக்கு மிகவும் பிடித்ததாக அவரின் மேனேஜர் கூறினார்.

அஜித்தை பல முறை இதற்கு முன்னர் சந்தித்திருக்கிறேன். அப்போதே எதிர்காலத்தில் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம் எனக் கூறினார். சொன்னதை இப்போது செய்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement