• Sep 20 2024

உடல் எடையை குறைத்துகொண்டே வரும் அஜித்..வெளியான லேட்டஸ்ட் லுக்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.மேலும்  இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியள்ளது.


அத்தோடு இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

உடல் எடை கூடியிருந்த நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்து வருவதாக தகவல் வெளிவந்தது.

இவ்வாறுஇருக்கையில் , அஜித் தனது ரசிகருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இதில் சற்று உடல் எடையை குறைத்தது போல் அஜித் தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 




Advertisement

Advertisement