• Sep 20 2024

முதல் முறையாக லைக்கா நிறுவனத்துடன் இணைந்த அஜித்! அஜித் விதித்த கட்டுப்பாடுகளுக்கு ஓகே சொன்ன லைக்கா? என்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!


யார் எந்த பெரிய இடத்துக்கு போனாலும் சரி நான் என் வேலையை மட்டுமே பார்ப்பேன் என பிடிவாதத்தோடு நடித்து வரும் நடிகர் அஜித்தாகத்தான் இருக்கமுடியும்.

எல்லோரும் வேலை பார்கிறது  மாதிரி என்னுடைய வேலை நடிப்பு.  நான் நடித்துக்கொண்டு பணத்தினை சம்பாதிக்கின்றேன். என் படம் பிடித்திருந்தால் பாருங்கள், இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.என்று தனக்கன்று ஒரு கோட்பாடு வைத்து நடித்து வருபவர்தான் அஜித். அப்படிப்பட்ட இவர் இன்னும் சில கட்டுப்பாடுகளை அவருக்கு அவரே போட்டிருக்கின்றார். 


படங்களில் அரசியல் ரீதியாக வசனங்கள் இருக்க கூடாது, அதே நேரத்தில் என்னுடைய படங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விலை போகவும் கூடாது என சில ரூல்ஸை வைத்திருந்தார்.ஆனால் தற்போது விடாமுயற்சி படத்தில் முதல்முறையாக லைக்கா நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றார். அதிலும் அஜித் போட்ட கண்டிஷனுக்கு  அவர் ஒத்துக்கொண்டிருக்கிறார் .


அதாவது நீங்கள் தயாரித்தாலும்  இந்த படத்தை  நடித்து முடித்த பிறகு என் வழியில் நீங்கள் குறுக்கிட கூடாது, ப்ரோமோஷனுக்கு வாங்க, ஆடியோலஞ் வாங்க, இன்டர்வியூ காெடுங்கள் என எந்த எதிர்பார்ப்பும் இருக்க கூடாது என கண்டிஷன் போட்டுத்தான் அஜித் கை்காவுடன் இணைந்து இருக்கிறார். லைக்காவும் இவர் நடித்தால் மட்டுமே போதும் என அஜித்தின் கட்டளைக்கு ஓகே சாெல்யிருக்கிறார்கள்.


இதனை வைத்து சன் பிக்சரும் எப்பிடியாவது அஜித்தை வைத்து படம் ஒன்று பண்ணிவிட வேண்டும் என போராடி வருகிறது. ஆனால் இன்று வரை உங்கள் சவகாசமே வேண்டாம் என்று கலாநிதி மாறனிடம் இருந்து ஒதுங்கி வருகிறார் அஜித். எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அஜித் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொள்ளாமல் அவர் இஷ்டம் போல் நடித்து வருகின்றார்.

Advertisement

Advertisement