• Sep 20 2024

உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறி வரும் அஜித்..புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவூட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் துவங்கவுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.


இந்நிலையில், நடிகர் அஜித் விடாமுயற்சி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். அஜித் ஸ்லிம்மாக மாறி வரும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகியுள்ளனர்.அத்துடன் இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement