சமீப காலமாக அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடியும் வருகின்றனர்.
மிக அரியதாகவே பொது இடங்களில் தோன்றும் அஜித் ஏர்போர்ட்டிற்கு சென்றாலும் சரி, ரைஃபில் கிளப்பிற்கு சென்றாலும் சரி அந்த புகைப்படம் லோ க்வாலிட்டியாக இருந்தாலும், பழைய புகைப்படமாக இருந்தாலும் அது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து சில நிமிடங்களிலேயே டிரெண்டாகி விடுகிறது.
இவ்வாறுஇருக்கையில் ஏகே 61 படத்தில் ஒரு பக்கம் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைத்த கேப்பில் 2 பைக் டூர் மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் பங்கேற்கு ஏராளமான பதக்கங்களையும் வென்று வந்து விட்டார் அஜித்.மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் ஏராளமாக வெளியாகி இணையத்தில் தாறுமாறாக வைரலானது.
எனினும் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
அத்தோடு லேட்டஸ்ட் தகவலின் படி ஏகே 62 படத்தின் ஷுட்டிங் அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், மற்ற கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சமயத்தில் தற்போது லைகா ப்ரொடக்ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவை அஜித் சந்தித்து பேசி உள்ளார். இந்த போட்டோ தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஏகே 61 ஷுட்டிங் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதாக சொல்லப்படுகிறது.
எனினும் இந்த சமயத்தில் ஏகே 62 பட தயாரிப்பாளர்களை அஜித் சந்தித்துள்ளதால் விரைவில் அப்டேட் வர போகிறதா ? அல்லது ஏகே 62 வேலைகள் ஆரம்பமாகி விட்டது என்பதற்கான மறைமுக அறிவிப்பா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Listen News!