• Sep 20 2024

கண்டிசன் போடும் அஜித்; மகிழ் திருமேனிக்கு அது பிடிக்குமா? - ஏகே 62 என்னாகப்போகிதோ?

stella / 1 year ago

Advertisement

Listen News!

வலிமை படத்தை பார்த்து அப்செட்டான அஜித் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பக்கா மாஸ் படமாக அமைந்தது. படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகளை எல்லாம் மறந்து விட்டு அஜித்தின் அதிரடியான ஆக்‌ஷன், டான்ஸ், காமெடி டைமிங், லுக் என அனைத்தையும் ரசிகர்கள் தியேட்டர்களில் ரசித்து பார்த்து கொண்டாடினர்.

சினிமா படங்களில் கூட வராத ட்விஸ்ட்டாக அஜித்தின் ஏகே 62 படத்தை நான் தான் இயக்கப் போகிறேன் என ரொம்பவே நம்பிக் கொண்டிருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் திடீரென மாற்றப்பட்டது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே ஷாக் ஆக்கியது. விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62வை தனது பயோவில் இருந்து நீக்கிய நிலையில், அந்த தகவல் உறுதியானது தான் என தெரிய வந்தது



அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்றும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை இந்த தகவலை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

போர்த்துக்கல் உள்ளிட்ட நாடுகளுக்கு நடிகர் அஜித் சுற்றுலா செய்து வந்த நிலையில், அவரது புகைப்படங்களை மனைவி ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வந்தார்.மேலும் காதலர் தினத்தில் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது இருப்பினும் அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.


இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆறு மாதத்திற்குள் எனக்கு ஷுட்டிங்கை முடித்திட வேண்டும் என்று அஜித் கூறி இருக்கின்றாராம்.ஆனால் மகிழ் திருமேனி இப்படி மைட்மிங்க எடுத்து  முடிக்கிற ஆள் கிடையாதாம்.அவருக்கு சுதந்திரமா படம் எடுக்கிறது தான் பிடிக்குமாம். இந்த டேட்டுக்குள்ள எடுக்கணும் இந்த டேட்டுக்குள்ள முடிக்கணும் என்றால் அவருக்கு பிடிக்காதாம்.இதனால் இருவரும் கூட்டணி சேர்ந்து அமையும் ஏகே 62 திரைப்படம் எப்படி அமையப்போகுதோ என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement