அஜித் நடித்த வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில் இன்னும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதும் சமீபத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி பேட்டி அளித்த போது வெறும் 60% படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது என்றும் அதில் கூட அஜித் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் காட்சி இருந்தால் மீண்டும் ரீஷூட் செய்ய தயார் என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மகிழ் திருமேனி சொல்வதை பார்க்கும் போது இப்போதைக்கு இந்த படம் முடியாது போல் தெரிகிறது.
இந்த நிலையில் அஜித் தற்போது ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு வரும் 7ஆம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு அவர் செல்வார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் அறிகுறி கூட தெரியவில்லை.
இதை அடுத்து ’குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பாளரிடம் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்குங்கள், உடனே நான் கால்ஷீட் தருகிறேன்’ என்று அஜித் சொன்னதாகவும் இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் படக்குழுவினர் ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் முதல் வாரத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைய இருக்கும் நிலையில் மூன்றாம் வாரத்திலேயே ஜப்பானில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க ஆதிக் திட்டமிட்டு இருப்பதாகவும் அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’விடாமுயற்சி’ படம் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பு இல்லை என்றும் வரும் தீபாவளி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கும் வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் சோகமாக உள்ளனர்.
Listen News!