• Sep 20 2024

ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டிச் செல்லும் அஜித்- செம வைரலாகும் வீடியோ!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் தான் அஜித்.நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.


சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்த்துக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.போர்த்துக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.


இந்நிலையில் நடிகர் அஜித்குமார், ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.  ரக்ஷா ஶ்ரீ காந்த் என்ற நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்துடன் பயணம் செய்த வீடியோக்கள் & புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.அத்தோடு அஜித் செம கெத்தாக கார் ஓட்டுகிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement