• Sep 21 2024

எளிமையாக ஆட்டோவில் செல்லும் அஜித்.. தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் துணிவு. இப்படத்தை எச். வினோத் இயக்குகின்றார். 

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.பிரமாண்டமாக தயாராகியுள்ள துணிவு திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் சிறிதாக பைக் ட்ரிப் ஒன்று சென்றுள்ளார் அஜித்.

எனினும் சமீபத்தில் கூட அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அஜித் மிகவும் எளிமையாக ஆட்டோவில் சென்ற வீடியோ ஒன்று வெளியானது.

இதை அனைவரும் வியர்ந்து பார்த்தார்கள்.மேலும் அந்த வீடியோவை தற்போது திடீரென ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement