• Nov 19 2024

லியோ படத்தை பாலோ பண்ணும் அஜித்... மகிழ் திருமேனிக்கு போட்ட கண்டிஷன் - இதெல்லாம் சரிவருமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித்தின் படங்கள் கடந்த 11-ஆந் தேதி பொங்கல் விருந்தாக வாரிசு-துணிவு ஆகிய இரு படங்களும் வெளியாகி இருந்தன .தனித்தனியாக வெளிவந்தாலே திரையரங்குகள் திருவிழாகோலம் பூண்டுவிடும் .இப்படங்களை இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது 25 நாட்களை கடந்தும் இரண்டு படங்களும்  திரையரங்குகளில்  வெற்றிநடைபோட்டு வருகின்றன.


இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியபோது கிடைத்த வசூலை விட இரண்டுமே தனியாக ரிலீசாகி இருந்தால் சற்று கூடுதலாக வசூல் கிடைத்திருக்கும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க தற்போது விஜய், அஜித் இருவருமே தங்களது அடுத்த படங்களின் பணிகளில் பிஸியாக உள்ளனர். குறிப்பாக விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், லியோ படம் வருகிற 2023-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாகும் என ரிலீஸ் தேதி வரை அறிவித்துவிட்டனர். ஆனால் மறுபுறம் ஏகே 62 படத்தின் இயக்குனரை தேர்வு செய்வதிலேயே கடும் இழுபறி நீடித்து வந்தது. அண்மையில் தான் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க உள்ளது உறுதியானது. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில், நடிகர் அஜித், விஜய்யின் லியோ பட பார்முலாவை பின்பற்ற முடிவு செய்துள்ளாராம். அதன்படி லியோ படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு ஷூட்டிங்கை தொடங்கி உள்ள நிலையில், ஏகே 62 படத்துக்கும் அதுபோன்று செய்ய ஐடியா கொடுத்துள்ளாராம். அதுமட்டுமின்றி இயக்குநர் மகிழ் திருமேனிக்கும் அஜித் ஒரு முக்கிய கண்டிஷனை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் ஷூட்டிங் தொடங்கி 4 மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்பது தானாம்.

தற்போது வெளியாகி இருந்த  தகவல்படி வருகிற மார்ச் மாதம் முதல் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக  நடந்து வருகிறது. அதன்பின் நான்கு மாதத்தில் ஷூட்டிங்கை முடித்து தீபாவளிக்கு ஏகே 62 படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற டார்கெட் உடன் தான் பயணிக்க உள்ளார்களாம். 

ஏற்கனவே மகிழ் திருமேனி படப்பிடிப்பை பொறுமையாக நடத்தும் ஒரு இயக்குநர் என பெயர் எடுத்தவர். அவர் அஜித்தின் இந்த வேகத்துக்கு ஈடுகொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.எனவே காத்திருந்து பார்ப்போம்.




Advertisement

Advertisement