சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்தால் அதனுடைய 2 ஆவது பாகத்தை எடுக்க அந்த இயக்குநர் அல்லது வேறு சில இயக்குநர்கள் திட்டமிடுவது உண்டு. அந்த வகையில், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாட்ஷா.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்றே சொல்லலாம் . இந்த படத்தில் ரஜினியும், ரகுவரனும் அருமையான நடிப்பை கொடுத்திருப்பார்கள் என்றே கூறலாம். ரஜினி மார்க்கெட் இந்த படத்தின் மூலம் உயர்ந்தது என்றும் கூறலாம்.
இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான இரண்டாவது பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில், பிரபல நடிகரான அஜித் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் இன்னும் ஒரு அசத்தலான தகவல் என்னவென்றால், பாட்ஷா 2 திரைப்படத்தை அஜித்தை வைத்து ஹிட் படங்களை கொடுத்த விஸ்ணு வரதன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் -விஸ்ணு வரதன் கூட்டணி இணைந்தால் அந்த படத்திற்கு இசை யார் என்று சொல்லியா தெரியவேண்டும். கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜாதான்.
இந்த கூட்டணி உறுதியானால் அஜித் தனது 62 வது படத்தில் நடித்து முடித்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே காத்திருந்து பார்ப்போம்.
Listen News!