• Sep 20 2024

வாரிசு பட ஷாமிற்கு பரிசு கொடுத்த அஜித்..அதுவும் என்ன தெரியுமா..அவரே கூறிய தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஷாம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குறித்து கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் இருக்கும் சாக்லேட் பாய் வரிசைகளில் இடம்பிடித்த நடிகர் ஷாம். தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் 12பி ஷாம். இப் படத்திற்கு முன்னதாகவே விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில காட்சிகளில் தலை காண்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் 12பி படத்திற்கு பிறகு எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.இதன் பின் இடையில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கு அதிக கவனம் செலுத்தி வந்த இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அத்தோடு, இவர் சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் தான் இவர் தற்போது விஜய்யின் “வாரிசு” படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இயக்குனர் வம்சி படிப்பாள்ளி இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு சங்கீதா என பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி வெளியான விஜய்யின் வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தான் சமீபத்தில் நடிகர் ஷாமிடம் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி எடுத்திருந்தது. அந்த பேட்டியில் நடிகர் அஜித் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாம் `தான் முதலில் நடித்த 12பி படைத்த பார்த்து விட்டு அஜித் ஒரு பேட்டியில் ஷாம் குறித்து பேசியிருக்கிறார். அதற்கு பின்னர் அஜித்தை பார்த்து நன்றி சொல்வதற்கு ஏவிஎம் ஸ்டூடியோஸ் சென்றிருக்கிறார் நடிகர் ஷாம்.

அங்கு சென்ற பின்னர் அஜித் வெகுவாக தன்னை பாராட்டியதாகவும், முதல் படம் போன்றே தெரியவில்லை 10 படங்கள் நடித்தது போன்று பிரமாதமாக நான் நடித்திருந்தேன் என்று அஜித் தன்னை பாராட்டினார் என்று கூறினார். அந்த பாராட்டு எனக்கு மிகவும் பெருமையாகவும், பெரிதாகவும் இருந்தது. இதன் பின்னர் என்னுடைய திருமணத்திற்க்காக பத்திரிகையை கொடுக்க அஜித் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் அதற்குள்ளா? என ஆச்சரியப்பட்டு கேட்டுள்ளார்.


அத்தோடு நடிகர் ஷாம் தான் 6 வருடங்களாக காதலித்து வந்ததை சொன்னதும் வாழ்த்துக்களை தெரிவித்து ஷாம் திருமணத்திற்கு அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தும், புதிய போன் ஒன்றையும் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.மேலும்  அந்த அன்பளிப்பை இன்னமும் தான் வைத்திருப்பதாக கூறினார் ஷாம். தற்போது ஷாம் நடித்த வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement