சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.இத்திரைப்படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்தில் கிரிஷ் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.துணிவு படம் நேற்று பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்த்துக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.போர்த்துக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டஅஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்கொட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மெட்ரோ லைனில் ஓடும் LK08FND பேருந்தில் ஏறி ரசிகர்களுடன் பயணம் செய்துள்ளார். பேருந்தில் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
Listen News!