• Nov 10 2024

விஜய்க்கு முதலே அரசியலுக்கு அழைக்கப்பட்ட அஜித்- அடடே இப்படியொரு சம்பவம் நடந்திருக்கா?- எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். சினிமாவிற்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. இந்தச் சூழலில் இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட்டானது. 

தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு பக்கா கமர்ஷியல் ஹிட்டானது அவரது 25ஆவது படமான அமர்க்களம். இந்தப் படத்திலிருந்துதான் ஷாலினிக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. இருப்பினும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவரது கவனம் பல வழிகளில் போக மீண்டும் தோல்வி வழிக்கு வந்தார் அஜித்.


அதனைத் தொடர்ந்து நடித்த தீனா, வில்லன், வரலாறு, அட்டகாசம் உள்ளிட்ட படஙக்ள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் மீண்டும்  அவரது 50ஆவது படமான மங்காத்தாவிற்கு பிறகு அஜித்திற்கு பெரும்பாலும் ஹிட் படங்களே அமைந்தன. சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துணிவு படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. 

 தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார்.பொதுவாக அஜித்குமார் யாருடைய பிரச்சினைக்கும் செல்வதில்லை என்ற பிம்பம் இருக்கிறது. அதேபோல் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் அவர் தெரிவிப்பதில்லை.குறிப்பாக பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு சர்ச்சையாக மாற ஒட்டுமொத்தமாக அரசியல் விஷயங்களிலிருந்தும், மீடியாக்களில் இருந்தும் ஒதுங்கிவிட்டார்.

அஜித் ஜெயலலிதாவின் ஆதரவாளர் என்ற கருத்து பொதுவாக பலரிடம் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குக்கூட அவர் வெளிநாட்டிலிருந்து வந்ததால் அதை பலர் உறுதியும் செய்தனர். ஆனால் அஜித் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என அவரது ரசிகர்கள் திடமாக நம்புகின்றனர். இந்தச் சூழலில் அஜித்தை ஜெயலலிதா அரசியலுக்கு அழைத்ததாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.


அதாவது, அஜித்தின் தைரியமான செயல்களும், வெளிப்படையான பேச்சுக்களும் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பிடிக்குமாம். எனவே அதிமுகவுக்கு நீங்கள் வந்துவிடுங்கள் பெரிய பொறுப்பு தருகிறேன் என ஜெயலலிதா அஜித்திடம் கூறியதாக ஒரு பேச்சு பரவலாக திரைத்துறையில் பேசப்பட்டதாம். ஆனால் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்க மறுத்த அஜித், இல்லை மேடம் அரசியலுக்குள் வர விரும்பவில்லை என டீசண்ட்டாக மறுத்துவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.


Advertisement

Advertisement