நேர்கொண்ட பார்வை & வலிமை படங்களுக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் தான் துணிவு. இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் தான் முடிவடைந்தது.இந்த துணிவு படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனலும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.அனிரூத் இசையில், லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி 17 அன்று தொடங்கும் என தகவல்கள்தெரிவிக்கின்றன.
இந்நிலையில் AK61 படத்தில் பிக்பாஸ் அமீர் நடந இயக்குநராக பணிபுரிய உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமீர் ஏற்கனவே நடிகர் அஜித் உடன் துணிவு படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!