• Sep 21 2024

ஓவர்சீஸில் அஜித்தின் 'துணிவு' பட ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டும் இத்தனை லட்சமா... வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணிக் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். ஏனைய முன்னணி நடிகர்களை போலவே இவருக்கும் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் ரசிகர்கள் உண்டு. 


அஜித் நடிப்பில் எந்தப் படம் வெளியானாலும் அந்தப் படத்திற்கு அமோக வரவேற்புக் கிடைத்து வருவது வழமை. இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'துணிவு' திரைப்படம் தயாராகி இருக்கின்றது. இப்படமானது வருகிற பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கின்றது.

மேலும் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இவர்களது கூட்டணியில் அஜித் நடித்துள்ள 3வது திரைப்படம் இது. இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் இப்படமானது முழுக்க முழுக்க வினோத் அவர்களின் கதையில் உருவாகி இருக்கிறது. 


அதுமட்டுமல்லாது இதுவரை வந்த போஸ்டர்களில் அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அத்தோடு பட ரிலீஸ் பொங்கலுக்கு என படக்குழு ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இதனால் வெளிநாடுகளில் படத்தின் புக்கிங் எப்போதோ தொடங்கிவிட்டது.


அந்தவகையில் ஓவர்சீஸில் இதுவரை நடந்த புக்கிங்கில் படம் ரூ. 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மென்மேலும் எதிர்பார்ப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

Advertisement

Advertisement