• Sep 21 2024

இணையத்தை தெறிக்கவிடும் அஜித்தின் ’சில்லா சில்லா’ பாடல்! 15 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் குமார்,  தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். மேலும் இவர் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.


இந்நிலையில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.  போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் முதல் பாடல் சில்லா சில்லா வெளியாகியுள்ளது.


அனிருத் குரலில் உருவான அந்த பாடல் முதல் 24 மணி நேரங்களில் 1 கோடி பார்வையை கடந்து சாதனை படைத்தது.  இதைத்தொடர்ந்து தற்போது வரை சில்லா சில்லா பாடல் ஒன்றை கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான படங்களில், குறைந்த நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற பாடல் என்ற பெருமையை சில்லா சில்லா பெற்றுள்ளது. 

Advertisement

Advertisement