அஜித் குமார், தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.
மேலும் இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.
மேலும் அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு ஹிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஷாலினியின் பிறந்தநாள் பார்ட்டியில் தனது முழு குடும்பத்துடன் அஜித் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதில் அஜித்தின் மகளை பார்த்த பலரும், தமிழ் சினிமாவிற்கு புது ஹீரோயின் கிடைச்சாச்சு என்று கூறி வருகிறார்கள்.
Listen News!