• Sep 19 2024

விடுமுறையில் குடும்பத்துடன் ஊர் சுற்றி பார்க்கும் அஜித்: கியூட் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அஜித் குமாரின் மனைவியான நடிகை ஷாலினி அண்மையில், இன்ஸ்டாகிராமில் இணைந்ததில் இருந்து, அவ்வப்போது தனது கணவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப்பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

நடிகர் அஜித் தனது சமீபத்தில் வெளியான  ‘துணிவு’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையை கழித்து வருகிறார். ​​இந்நிலையில், அங்கு எடுத்துக்கொண்ட அஜித்தின் புகைப்படத்தை ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தற்போது, ஷாலினி பகிர்ந்துகொண்ட இரண்டு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், அஜித் தனது வரவிருக்கும் படமான ‘AK62’ படப்பிடிப்பைத் விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் தனது உலக பைக் சுற்றுப்பயணத்திற்கு நடிப்பில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வார் என்று தெரிகிறது.

முதலில் ‘AK62’ படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டு இயக்குநர் மகிழ் திருமேனியுடன் அஜித் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் .எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement