• Sep 21 2024

வெளியாகிறது துணிவு படத்தின் 'காசேதான் கடவுளடா' பாடல்... மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனான அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'துணிவு'. அதாவது 'நேர்கொண்ட பார்வை, வலிமை' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார், இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் 3ஆவதாக இப்படம் உருவாகியுள்ளது.

ஏனைய படங்களைப் போலவே இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். அத்தோடு அஜித்துடன் இணைந்து இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சமுத்திரக்கனி, வீரா, மமதி சாரி, சிபி சந்திரன், மகாநதி சங்கர், பிரேம்குமார் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.


இப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், தமிழக திரையரங்கு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அத்தோடு வெளிநாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

துணிவு படத்தின் முதல் சிங்கிள் டிராக் சில்லா சில்லா பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இன்னமும் அந்தப் பாடல் தான் யூடியூஒ டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சில்லா சில்லா பாடலைத் தொடர்ந்து துணிவு படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக்கான காசேதான் கடவுளடா என்ற பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


அந்தவகையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு காசேதான் கடவுளடா 2ஆவது சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது. மேலும் இன்று விடுமுறை என்பதால், காசேதான் கடவுளடா என்ற பாடலை அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது இதற்கு முன்னதாக அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அஜித் பேசும் வசனம் Money Money Money... இதை மையப்படுத்தி கூட இந்தப் பாடல் அமைந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எவ்வாறாயினும் இப்பாடல் வெளியாக இருப்பதை அறிந்த அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர். 


Advertisement

Advertisement