தமிழ் சினிமாவில் நம் நெஞ்சை விட்டு அகலாத பல பாடல்களைக் கொடுத்த ஒருவரே பாடகர் பம்பா பாக்யா. பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட இவர் இன்று மரணமடைந்த செய்தி ஆனது திரையுலகில் பலரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் இவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். பம்பா பாக்கியாவிற்கு நேற்று திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. மேலும் 49 வயதே ஆகும் நிலையில் அவரின் திடீர் மரணத்தால் தமிழ் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
தமிழ் சினிமாவில் பாடகர்களை பொறுத்தவரையில் பெரும் கனவாக இருப்பது எப்படியாவது நாமும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் பாடிவிட வேண்டும் என்பது தான். ஆனால் நம்ம பம்பா பாக்யாவோ ஏ.ஆர்.ரகுமான் இசையில் 5இற்கும் அதிகமான சூப்பர் ஹிட் பாடலை பாடி விட்டார்.
அதுமட்டுமல்லாது முதன்முதலில் மேடைக் கச்சேரிகளில் பாடி வந்த பம்பா பாக்யாவை சினிமாத் திரையுலகில் பாடகராக அறிமுகப்படுத்தியதும் ஏ.ஆர்.ரகுமான் தான். பாக்யா என்ற பெயர் கொண்ட இவரை பம்பா பாக்யாவாக மாற்றியது ஏ.ஆர்.ரகுமான் தான்.
அதாவது பம்பா என்பது ஆபிரிக்க பாடகர் ஒருவரின் பெயராம். அவரைப் போலவே பாக்கியாவும் பாடுவதால், பம்பா பாக்யா என பெயரினை இவரிற்கு வைத்துவிட்டாராம் ரகுமான். தற்போது ரகுமான் வைத்த இந்தப் பெயரே அவரது அடையாளமாக மாறிவிட்டது.
பம்பா பாக்யா தன்னுடைய குரலில் முதன்முதலில் பாடல் பாடிய படம் 'இராவணன்'. அப்படத்தில் இடம்பெறும் "கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு.." என்கிற பாடலை பென்னி தயால் உடன் இணைந்து பாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னர் சுமார் 8 ஆண்டுகளுக்கு சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த இவருக்கு ரகுமான் அவர்கள் மீண்டும் தனது இசையில் உருவான 'எந்திரன் 2.0' என்ற படத்தில் பாடுவதற்கு வாய்ப்பளித்தார்.
அதனைத் தொடர்ந்து 'சர்கார், பிகில், இரவின் நிழல், பொன்னியின் செல்வன்' என தனது படங்களில் தொடர்ந்து பாட வாய்ப்பளித்து வந்தார் ஏ.ஆர்.ரகுமான். இதன்மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பெரியளவில் பேமஸ் ஆனார் பம்பா பாக்யா.
இவ்வாறாக பம்பா பாக்யா தமிழ் சினிமாவில் தொடர்ந்தும் ஏராளமான பாடல்களை பாடி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் இன்று காலை அவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
மேலும் ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பலரதும் படங்களில் பாடல் பாடியுள்ள அவர், "நான் அஜித் படத்தில் பாடல் பாட வேண்டும் என ரொம்ப ஆசைப்படுகிறேன்' என ஒரு பேட்டியில் மிகவும் ஏக்கத்தோடு கூறி இருக்கிறார்.
ஆனால் அவரின் அந்த ஆசை கடைசியில் நிறைவேறாமல் போய் விட்டது. இதனால் பம்பா பாக்யாவின் மறைவிற்கு அஜித் ரசிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலினைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!