• Nov 10 2024

பச்சை உடையில் பளிச்சென மின்னும் அஜித்தின் மச்சினி….வைரலாகும் வீடியோ பதிவு…!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷாம்லி. இவர் நடிகையாக அறியப்பட்டதை விட தல அஜித்தின் மச்சினியாகவே மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதாவது இவரின் மனைவி ஷாலினியும், ஷாம்லியும் உடன் பிறப்புக்களாவர்.

இவரின் அக்காவை போன்றே ஷாம்லியும் குழந்தை நட்சத்திரமாகவே முதல் முதலில் திரைப்படங்களில் அறிமுகமாகியிருந்தார். அதாவது 1990 இல் வெளியான 'அஞ்சலி' என்ற படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையாக நடித்து ஒரு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் புகழ் பெற்றதன் காரணமாக தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளையும் வென்ற ஷாம்லி 2009-ஆம் ஆண்டில் 'ஓய்' என்ற தெலுங்குப் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். அதுமட்டுமன்றி விக்ரம் பிரபுவுடன் இணைந்து 'வீரசிவாஜி' என்ற படத்திலும் நடித்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து 'அம்மம்மாகாரில்லு' என்ற படத்திலும் நடித்திருக்கின்றார்.

இவருக்கு நடிப்பு தவிர ஓவியம் வரையும் திறமையும் உண்டு. மற்ற நடிகைகளை போன்று பட வாய்ப்பு வருமா வராதா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் தனக்கு மிகவும் பரீட்சயமான ஓவியம் வரைதலிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். அதுமட்டுமன்றி ஷாம்லி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கின்ற ஒருவர். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருவார்.

இந்நிலையில் இவர் சமீபத்திலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருக்கின்றார். அதில் அவர் பச்சை உடையணிந்து ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளித்திருக்கின்றார். மேலும் என்றுமே இல்லாத அளவிற்கு ரொம்பவும் அழகாக இருக்கின்றார் ஷாம்லி. இதனை பார்த்த ரசிகர் அவ்வீடியோவை தமது வலைத்தளப் பக்கங்களிலும் ஷேர் செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement