பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. மேலும் பிரம்மாண்ட பட்ஜட்டில் உருவாகும் இப்படத்திற்கு அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.
அதுமட்டுமல்லாது இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பமாகும் எனவும் கூறப்படுகின்றது. இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். அத்தோடு இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் நின்றுபோய்விட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது. ஆனால் அந்தத் தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும், கூறியபடி வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது.
Listen News!