தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் வலிமை படத்தின் போனி கபூர், எச் வினோத் கூட்டணியில் மீண்டும் இணைந்திருந்தார். ஏகே61 என பெயரிடப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே புஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது அஜித் பைக் ரைட் எல்லாம் முடித்துவிட்டு படப்பிடிப்பினை ஆரம்பித்து விட்டார் என்ற செய்தியும் வெளியாகியது.
அஜித் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது 'துணிவு' திரைப்படம். வாங்கி கொள்ளையை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக பாங்காங்கில் நடைபெற உள்ளது.
இவ்வாறுஇருக்கையில் பிரபல பிஆர்ஒ ரமேஷ் பாலா நேற்று மாலை 6.30 மணியளவில் அஜித்தின் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று குறிப்பிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.
அவர் சொன்னது 6.30 மணிக்கு காத்திருந்தபடியே போனி கபூர் அவர்கள் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டார். துணிவு என்ற டைட்டில் மாஸ் லுக்கில் அஜித்தின் லுக்கை பார்த்து ரசிகர்கள் இணையத்தினை அதிரவைத்து வந்தனர்.
இந்நிலையில் துணிவு படத்தின் அஜித் உட்கார்ந்திருக்கும் போஸ் ஏற்கனவே நடிகர் பவண் கல்யாண் நடித்த வக்கீல் சாப் போஸ்டரை போன்றுள்ளது என்று பலர் கலாய்த்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாது இந்த டைட்டில் மற்றொரு படத்தின் காப்பி என சிலர், ட்ரோல் செய்து வருகிறார்கள். ஆனால் இப்படி ட்ரோல் செய்யப்பட்டு வரும் போஸ்டர், 'துணிவு' என்கிற குறும்படத்தின் போஸ்டர் தானே தவிர, திரைப்படத்தின் போஸ்டர் இல்லை. மேலும் இது கூட தெரியாமல் சிலர் ட்ரோல் செய்து வருவதாக அஜித் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். எனினும் துணிவு படத்தின் டைட்டில் வெளியாகி சில நிமிடங்களிலேயே இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!