அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'துணிவு'. அதாவது 'நேர்கொண்ட பார்வை, வலிமை' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார், இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் 3ஆவதாக இப்படம் உருவாகியுள்ளது.
ஏனைய படங்களைப் போலவே இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார். அத்தோடு அஜித்துடன் இணைந்து இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சமுத்திரக்கனி, வீரா, மமதி சாரி, சிபி சந்திரன், மகாநதி சங்கர், பிரேம்குமார் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், தமிழக திரையரங்கு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அத்தோடு வெளிநாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
குட் மற்றும் evil என அஜித் இரண்டு விதமாக நடித்து இருக்கிறார் என இயக்குநர் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதனால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அத்தோடு துணிவு படத்தின் ரன்டைம் இதுவரை வெளியாகாமல் தான் இருந்தது. இன்னும் சென்சார் பணிகள் முடிவடையவில்லை என்பதால் தான் தற்போது வரை ரிலீஸ் தேதியையும் அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.இவ்வாறுஇருக்கையில் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி துணிவு ரன்டைம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் என உறுதியாகி இருக்கிறது.
Listen News!