• Nov 10 2024

அஜித் வேர்ல்ட் டூர் - ஓடிடியில் ரிலீஸாகிறதா?..செம குஷியில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு லைகா தயாரிப்பில் நடிக்க கமிட்டானார் அஜித். அதை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த சூழலில் அவர் வெளியேறியதை அடுத்து ஏகே 62 படத்தை இயக்குவதற்கு கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்து கடைசியாக உதயநிதியை வைத்து கலகத்தலைவன் படத்தை இயக்கிய மகிழ்திருமேனி கமிட்டாகியிருக்கிறார்.

இந்த படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பெயர் அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியானது. பெயருக்கு ஒருசேர வரவேற்பும், விமர்சனமும் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி அஜித் எப்போதுதான் வி செண்ட்டிமெண்ட்டில் இருந்து வெளியே வருவாரோ என ஒரு தரப்பினர் நேரடியாகவே தங்களது விமர்சனத்தை முன்வைத்தனர்.

 படத்தின் கதையை இறுதி செய்வதற்கு மகிழ் திருமேனிக்கு பல மாதங்கள் நேரம் கொடுக்கப்பட்டது. அவரும் அதில் மும்முரமாக இறங்கியிருந்தார். எனவே படம் தொடங்க தாமதமானதால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பைக்கில் உலகத்தை சுற்றும் பரஸ்பர மரியாதை பயணத்தின் முதல் கட்டத்தை தொடங்கினார் அஜித்குமார். அதன்படி அவர் நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளில் ரவுண்டு அடித்துக்கொண்டிருக்கிறார்.

அஜித் வேர்ல்ட் டூரை ஆரம்பத்திலிருந்து அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகின்றன. அதேபோல் இந்த டூரை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா பதிவு செய்யவிருப்பதாகவும், அது ஆவணப்படமாக வெளியாகும் என்று தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. அதுமட்டுமின்றி நேபாளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களை அஜித் குடும்பத்தினரிடம் அவர் போட்டுக்காட்டியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அஜித் செய்யும் வேர்ல்ட் டூர் குறித்த புதிய தகவல் ஒன்று உலாவிவருகிறது. அதன்படி, அஜித் இதுவரை செய்த சுற்றுப்பயணத்தையும், அடுத்ததாக அவர் செய்யவிருக்கும் சுற்றுப்பயணத்தை ஆவணப்படமாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட ஒரு திட்டம் இருக்கிறதாம். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், இது நல்ல திட்டம்தான் இதனை எந்த யோசனையும் இல்லாமல் அஜித் செய்யலாம் என கூறிவருகின்றனர்.

இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருந்தது. அதுகுறித்த பேச்சும் கோலிவுட்டில் சில நாள்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது மே 22ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஷூட்டிங் மொத்தம் 40 நாட்கள் நடக்கவிருப்பதாகவும், அதில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிக்கப்படும் என தகவல் சொல்லப்படுகிறது.


Advertisement

Advertisement