தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ம் தேதி வெளியானது.இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ஹனி ரோஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் சக்சஸ் நடந்தது.
இதில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்கள் குறித்து மரியாதை குறைவாக பேசியதாக சொல்லப்பட்டது.
தன் தந்தை என்.டி.ராமராவின் காலத்தைச் சேர்ந்த சக நடிகர்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது பழம்பெரும் முன்னணி நடிகர்களான அக்கினேனி நாகேஸ்வர ராவ், ரங்கா ராவ் ஆகியோரை மரியாதை குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. அதாவது 'அக்கினேனி தொக்கினேனி' என ரைமிங்காக பேசி சிக்கலில் மாட்டினார் பாலய்யா.
இந்த வீடியோ வைரலான நிலையில், அக்கினேனி நாகேஸ்வர ராவ் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் நாகர்ஜுனாவின் மகன்கள் நாக சைதன்யா, அகில் இருவரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர்."நந்தமூரி தாரக ராமா ராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்கா ராவ் இவர்கள் தங்களது படைப்பாற்றலால் தெலுங்கு சினிமாவின் பெருமையாகவும் தூண்களாகவும் திகழ்ந்தனர்.
அவர்களை அவமானப்படுத்துவது நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதற்கு சமம்" என அறிக்கை விட்டு பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். பாலய்யாவின் தந்தை என்.டி.ஆர், அக்கினேனி நாகேஸ்வர ராவ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் .இதனையடுத்து தற்போது இந்த சர்ச்சை குறித்து பாலகிருஷ்ணா விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், நான் அக்கினேனி சித்தப்பாவை தப்பாக பேசினேனா?, அவர் தன் சொந்த குழந்தைகளை விட என் மீது அதிக பாசத்துடன் இருப்பார். நான் சொல்லவந்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என விளக்கமளித்துள்ளார். எப்போதுமே எதையும் சீரியஸ்ஸாக பேசத் தெரியாத பாலய்யா, இந்த முறையும் அசட்டுத்தனமாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததோடு. திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால் வேறு வழியே இல்லாத பாலய்யா, உடனடியாக யூடர்ன் அடித்து அக்கினேனி தனது சித்தப்பா மாதிரி என விளக்கம் கொடுத்து தப்பித்துவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Listen News!