• Sep 21 2024

இந்தியாவை காலால் மிதித்த அக்ஷய் குமார்... வெடித்தது புதுச் சர்ச்சை.. வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அக்ஷய் குமார். இவர் இம்ரான் காஷ்மியுடன் இணைந்து தற்போது நடித்திருக்கும் திரைப்படம் 'செல்பி'. இத்திரைப்படமானது வரும் 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்றது.


இந்நிலையில் நடிகர் அக்ஷய்குமார் வடக்கு அமெரிக்காவில் மார்ச் மாதம் சுற்றுலா செல்வதற்காக எடுக்கப்பட்ட விளம்பர வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். 19 விநாடிகள் மட்டுமே கொண்ட அந்த வீடியோவில் அக்ஷய்குமாருடன் இணைந்து திசா பதாணி,  நோரா பிரதேகி,  மௌனி ராய்,  சோணம் பசுவா உள்ளிட்ட பலரும் உள்ளனர்.  


இந்த வீடியோவில் நடிகர்கள் அனைவரும் பூமிப்பந்தில் நடப்பது போன்று உள்ளது. அதாவது பூமிப்பந்து சுழல நடிகர்கள் அதன் மேல் நடக்கிறார்கள்.   மற்ற நடிகர்கள் பிற நாடுகளின் உடைய வரைபடங்கள் மீது காலடி எடுத்து வைக்கும் நிலையில் , அக்ஷய்குமார் இந்திய வரைபடத்தின் மீது நடக்கிறார்.


இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் அக்ஷய குமாருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது இந்திய வரைபடத்தை  அக்சய் குமார் அவமதித்துவிட்டார் என்று பல வகையில் குற்றம் சாட்டி வருகின்றனர் . 


அதுமட்டுமல்லாது அக்ஷய் குமாரின் கனடா குடி உரிமையை வைத்தும் ட்ரோல்கள் செய்து வருகின்றார்கள். உலகின் மற்ற நாடுகளில் வரைபடத்தில் மற்ற பிரபலங்கள் காலடி எடுத்து வைக்கும் போது அக்ஷய் குமார் மட்டுமே இந்திய வரைபடத்தில் அடி எடுத்து வைக்கிறார்.  அவர் இந்திய வரைபடத்தில் மிதித்து நடப்பதால் அவர் இந்தியாவையே அவமதிப்பதாக அக்ஷய்குமாருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

Advertisement

Advertisement