• Nov 17 2024

ஐயோ இந்த நடிகையோட மட்டும் இனிமேல் நடிக்க மாட்டேன்- அடப்பாவமே- பிரபல நடிகையை ஒதுக்கி வைத்த நடிகர் ஜெயம் ரவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கவர்ந்த நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் தற்பொழுது அகிலன் திரைப்படம் உருவாகி வருகின்றது. இது தவிர பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய எம். குமரன் ,சம்திங் சம்திங், தனி ஒருவன், கோமாளி போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இருப்பினும் இறுதியாக வெளியாகிய பூமி திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் உங்களுக்குப் பிடித்த படம் எது என்று கேட்டபோது ஜெயம் ,தில்லாலங்கடி இரண்டும் பிடிக்கும் என்று கூறினார்.

மேலும் நீங்க அடுத்ததாக எந்த நடிகையோட நடிக்கவே மாட்டீங்க என்று கேட்ட போது தமன்னா என்று கூறியுள்ளார். ஏனென்றால் தமன்னா எங்க வீட்டில ணரு சகோதரி மாதிரி பழகிட்டாங்க அதனால அவங்களோட இனிமேல் நடிக்க வேண்டாம் என அவர் கூறியதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement