சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர். இதில் குணசேகரன், ஆதிரை, கரிகாலன், நந்தினி, ஜனனி, ஜான்சிராணி என ஒவ்வொருவரும் தங்களது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஆதிரை அருண் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் இறுதியில் தன்னை ஒரு தலையாக காதலித்த கரிகாலனை கட்டாயக் கல்யாணம் பண்ணி இருக்கின்றார். இருப்பினும் இவர்கள் இருவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றன.
அந்தவகையில் ஆதிரை என்னும் கதாபாத்திரத்தில் விஜே சத்யா தேவராஜன் நடிக்கிறார். இவர் சீரியல்களில் மட்டுமன்றி சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இந்நிலையில் சத்யா இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாகியுள்ளது.
அதாவது நடிகர் தனுஷ் 2015 ஆம் ஆண்டு அனேகன் என்னும் பட ப்ரோமோஷனுக்காக ரசிகர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இணைந்து பங்கேற்றிருந்தார். அப்போது தனுஷிடம் சத்யா "நீங்க படத்துல நிறைய ஹீரோயின்களுக்கு லவ் ப்ரபோஸ் பண்ணி பார்த்திருக்கேன். நிஜத்துல இப்ப இந்த நிகழ்ச்சியில இருக்க பொண்ணுங்க யார்கிட்டயாவது உங்க ஸ்டைலில் ப்ரபோஸ் பண்ண முடியுமா?" எனக் கேட்டார்.
இதனையடுத்து தனுஷ் "உனக்கு என்ன பிடிச்சிருக்கா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். ஐ லவ் யூ" என நடிகர் கார்த்திக் உடைய குரலில் ப்ரபோஸ் செய்து காட்டுகின்றார். தனுஷின் இந்த பதிலை கேட்டு சத்யாவும் மகிழ்ச்சி அடைகின்றார். இதனைப் பார்த்த எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் பலரும் "இதெல்லாம் கரிகாலன் பார்த்தா உயிர் விட்டுருவானே" என கிண்டலாக தமது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!